தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் நாளை சென்னை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழகம் கடலோரம்,தென்மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.