Categories
உலக செய்திகள்

HIGH ALERT: சமூக பரவலான குரங்கு அம்மை…. உலகம் முழுவதும் அவசர நிலை அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 57 நாடுகளில் இந்த நோய் பாதிப்பு உண்டாகி உள்ளது.குரங்கு அம்மை நோய் சமூக பரவல் எதிரொலியாக அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக குரங்கு அம்மை நோய் தொற்று பரவ தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலை ஆக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கின்றது.

மேலும் இந்த நோய் தொற்று குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக் கூடியது அல்ல என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய்த்தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வளர்ப்புப் பிராணிகள் உட்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்து இதில் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |