தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் .
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.