தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.