Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி,கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |