Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…..!!!!

தமிழகம் முழுவதும் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும்  கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை போலவே நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஜூலை 1 முதல் 3 வரை சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |