Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழக்தில் 4 நாட்களுக்கு….. கனமழை பெய்ய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை  மாலை வரை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும். பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அசானி புயல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மே 13ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |