Categories
சினிமா தமிழ் சினிமா

“காப்பான் வழக்கு” தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் கதை எழுதி அதை இயக்குனர் கே.வி ஆனந்திடம் விரிவாக விளக்கியதாக தெரிவித்தார்.

Image result for காப்பான்

எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும் பொழுது வாய்ப்பு தருவதாக கூறியதாகவும் இந்நிலையில் சரவெடி கதையை  காப்பான் என்ற பெயரில் கே வி ஆனந்த் எந்த அறிவிப்பும் எனக்கு அறிவிக்காமல் படமாக்கியதாகவும் தெரிவித்தார். எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Image result for காப்பான்

அதில் மனுதாரரை எந்த விதத்திலும் நான் சந்தித்ததில்லை என்றும் அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தன்னுடைய கதை வேறு சரவெடி கதை வேறு இரண்டுக்கும் தொடர்பில்லை என்றும் இயக்குனர் கே வி ஆனந்த் சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவறாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதால் காப்பான் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர் மீது அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளார்.

Categories

Tech |