ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் வருமானவரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறைக்கு பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் ஆர் ரகுமான் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி பதில் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். இதையடுத்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏ ஆர் ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.