Categories
தேனி மாவட்ட செய்திகள்

உரங்களுக்கு அதிக விலை வசூலித்தல்… இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்… வேளாண்மை அதிகாரி தகவல்…!!

தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு அதிக விலை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு உள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு அமலில் உள்ள போதிலும்  விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கூட்டுறவு உர விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது என தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் உர மூட்டையில் குறிப்பிட்டிருக்கும் விலையை விட அதிகபட்ச விலை கூறினால் விவசாயிகள் 83001 08666 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை  தெரிவிக்கலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி, செல்போனுக்கு வரும் கடவுச்சொல்லை காண்பித்தும் ரசீது பெற்று கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |