Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49% ஆக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் கே.பி அன்பழகன்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கிய உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49% ஆக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது எனகூறியுள்ளார். அதிகளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் சூழல் இருப்பதால் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை 26.3% ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 46%ஆக முதலிடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் அம்மா இளைஞர் நலன் விளையாட்டு திட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் என கூறியுள்ளார். அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இத்திட்டம் ஒரு மாதத்திற்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |