18 மாதங்கள் பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட உயர்நிலை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்காவில் செர்ரி ஹில் பகுதியை சேர்ந்த பிரிட்ஜெட் சிபிரா என்ற உயர்நிலை ஆசிரியை கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 18 மாதங்கள் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவனை மயக்கி பல இடங்களுக்கு அழைத்து சென்று அவனிடம் தவறாக நடந்துள்ளார். இதுவரை 60 முறை சிறுவனை அந்த ஆசிரியை அழைத்துச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிரிட்ஜெட்டை கைது செய்தனர். சிறுவன் நலனிற்கு ஆபத்தை ஏற்படுத்துதல், வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர் வெகுவிரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.