Categories
விளையாட்டு

உயரிய விருது…… ”இரண்டு பேர் தேர்வு” அசத்திய மாற்றுத்திறனாளி வீராங்கனை…!!

விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது  தீபா மாலிக் மற்றும் பஜ்ரங் பனியா_வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்திய விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா , அர்ஜூனா விருது வழங்கி வருகின்றது.இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் அர்ஜுனா விருது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு துறையை சார்ந்த சங்கங்கள் இதற்கான பெயர்களை பரிந்துரை செய்தன. இதற்கான குழு டெல்லியில் கூடி ஆலோசித்தது தகுதியான பெயர்களை ஏற்றுக் கொண்ட பின்னர் மத்திய அரசு இந்த விருதுகளை அறிவிக்கிறது.

இதைத் தவிர மிகவும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது  பாரா தடகள வீராங்கனை மாற்றுத்திறனாளி  தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பனியா ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இந்தவிருது கொடுக்கப்பட்டு வருகின்றது.அதே போல வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்ததற்காக  3 பேருக்கு  துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளியான தீபா மாலிக்  2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |