Categories
உலக செய்திகள்

90 வருடங்களில் இல்லாத வெப்ப நிலை.. சுட்டெரிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மாகாணம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Death Valley என்ற தேசிய பூங்காவின் பகுதியில் வெப்பநிலை சுமார் 130F  என்ற அளவில் பதிவானது. இது சுமார் 90 வருடங்களில் இல்லாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1913 ஆம் வருடத்தில் அந்தப் பகுதியில் சுமார் 134F என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இது உலக வரலாற்றில் சாதனையாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஜூன் 26ம் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதி வரைக்கும் வெப்பநிலை தாங்கமுடியாமல் ஒரேகான் பகுதியை சேர்ந்த 116 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வாஷிங்டனில் 78 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 98 டிகிரி வெப்பநிலை இருந்துள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் அதிகமான பகுதிகள் காட்டு தீயால் அழிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சுமார் 38 சதுர மைல்களுக்கு தீ பரவியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |