Categories
உலக செய்திகள்

உலகிலேயே உயரம்… 2,300 அடி உயர மலை உச்சியில் அமைந்துள்ள ஊஞ்சல்… த்ரில்லர் அனுபவம்..!!

சீனாவில் 328 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சோங்கிங் பகுதியில் 2,300 அடி உயரம் உள்ள மலை உச்சியில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டு, அதுவே உலக அளவில் உயரமான ஊஞ்சல் என கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 328 அடி உயரம் கொண்ட அந்த ஊஞ்சல் 30 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு அமைந்துள்ளது. அதோடு இந்த ஊஞ்சல் சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கின்றது.

இவ்விடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பின்னர் பள்ளத்தாக்கை நோக்கி 328 அடி உயரத்தில் இருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஊஞ்சலாட தள்ளி விடப்படுகின்றனர். பறந்துகொண்டே பள்ளத்தாக்கின் அழகை திரில்லாக கண்டு ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்கு ஏராளமான சாகச பிரியர்கள் அவ்விடத்தில் வந்து குவிகின்றனர்.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |