புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும்.
சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய SI மையிறவா புடுங்க போன நாய ,பைத்தியக்கார ….என்று ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.