பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக உறுதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜகவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறியது, இலவசங்கள் என்பது எதிர்கட்சிகள் செய்யக்கூடியது. கடன்கள் அல்லது மின் கட்டணங்களை தள்ளுபடி செய்வது போன்றவை.
மேலும் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டிகள் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் கட்சியின் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறார். அதிகாரம் மற்றும் இலவச கவர்ச்சிக்கு இடையே வேறுபாடு உள்ளது. நீங்கள் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கும் போது கவர்ச்சி அல்ல. எங்களின் அனைத்து திட்டங்களும் பெண்கள் தோட்டக்கலை பயிர் செய்பவர்கள், விவசாயிகள் ஆகியோர்கள் அதிகாரம் அளிப்பதற்காகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் கூறியது, இலவசங்கள் மற்றும் மக்கள் நலத்திட்ட நடவடிக்கை பாஜக வேறுபடுத்தி பார்க்கிறது. 75 ஆண்டுகளாக மின்சாரம் கிடைக்காத ஏழை வீட்டுக்கு மின்சார கிடைப்பது உள்கட்டமை உருவாக்குவதாகும்.
ஆனால் அவர்களின் மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை தள்ளுபடி செய்வது அல்லது இலவச மின்சாரம் கொடுப்பது என்பது இலவசம். அதனை போல ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பறைகள் வழங்குவதையோ அல்லது தொற்று நோய்களின்போது இலவசமாக உணவு வினியோகிப்பதையோ கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக வட்டாரங்கள் இது ஒரு கடினமான விவகாரம் என்று ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், பாஜகவுக்கு சில விருப்பங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அது என்னவென்றால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எங்களின் போட்டியாளர்கள் பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு வாக்குகளை அளித்து வருகின்றனர். மேலும் பாஜகவால் முகத்தை திருப்பிக் கொள்ள முடியாது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.