மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியின் உருவான மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு மந்திரி புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டு பேசியது, இந்தியாவின் கல்வி பிரிவில் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். வருகின்ற நாட்களில் வரலாற்று எழுதப்படும் போது இந்த நாள் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்.
அதனைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை வழியே தாய்மொழி வழி மாணவர்களுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இது ஒரு வரலாற்றின் முடிவு. மோடிஜியின் கீழ் உயர்கல்வி உங்களது வசதிக்கேற்ப எந்த ஒரு மொழியிலும் தற்போது நீங்கள் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர் ஒரு வர் கூறியது, இது எளிய பணியாக இல்லை. ஆனால் மிக எளிய மொழியில் இதனை நாங்கள் தயாரித்து உள்ளோம். மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவியாக இருக்கக்கூடிய வகையில் நாங்கள் தயாரித்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.