பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘தில் தோ ஹேப்பி ஹாய் ஜி‘ என்ற இந்தி தொடரில் இரண்டாவது கதா நாயகியாக நடித்துள்ளார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜல் சீரியல்களில் நடிப்பதற்காக மும்பையிலுள்ள தானேவில் மீரா ரோட்டில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி வந்துள்ளார். சேஜல் சர்மா வயது இருபத்தி ஐந்து. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னலை உடைத்து பார்த்த போது சேஜல் சர்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மீரா ரோடு போலீசார் சேஜல் சர்மா பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.