Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘இருமுகன்’… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது.

ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம் . ஆனால் சமீபகாலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் ,கைதி, மாஸ்டர் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருகிறது .

Vikram's Iru Mugan gets U/A, all set to release on September 8 | The News  Minute

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா ,நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘இருமுகன்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது . விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் ,நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |