ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. ஹிந்தியை அமுல்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் நினைக்கலாம்.. இது இந்தி தானே, ஒரு மொழி தானே, இந்திய மொழி தானே, இதை கற்றுக் கொள்வதில் என்ன தடை ? என்று பலபேர் கேட்கலாம். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன்.
இந்தியை மெல்ல நுழைய விட்டால் என்ன ஆகும் தெரியுமா? ஒரு மூட்டை நிறைய முந்திரி பருப்பு இருக்கிறது, அந்த முந்திரி பருப்பை மூட்டை கட்டி வைத்திருக்கிறோம். அந்த முந்திரிப் பருப்பில் ஒரு பத்து வண்டுகள் உள்ளே விழுந்து விட்டன. முந்திரிப் பருப்பு எண்ணிக்கை அதிகம், வண்டுகளின் எண்ணிக்கை குறைவு என்று அலட்சியமாக நீங்கள் இருக்கிறீர்கள்.
ஒரு மாதம், இரண்டு மாதம் கழித்து நீங்கள் அதை திறந்து பார்த்தால், உள்ளே முந்திரி பருப்புகள், பருக்கைகளாக உடைக்கப்பட்டு இருக்கின்றன. தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. முந்திரிப் பருப்பு மூட்டை அது எங்கள் தாய்மொழி, இந்தி வண்டு. இந்தி என்கின்ற வண்டு நுழைந்தால், இந்த முந்திரிப் பருப்பு மூட்டை என்ன ஆகும். இதற்கு சாட்சி இருக்கிறதா ? என்று நீங்கள் கேட்கலாம்.
இப்போதெல்லாம் மேடைகளில் எதையும் பேசிவிட முடியாது. ஊடகம் விழிப்போடு இருக்கிறது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், சட்டம் விழிப்போடு இருக்கிறது, அரசு விழிப்போடு இருக்கிறது. அதனால் ஒரு மேடையில் பேசுகிறவன், தனி வெளியில் பேசுகிறபவன் கூட.. இன்றைக்கு சாட்சி இல்லாமல் பேச முடியாது என தெரிவித்தார்.