விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படத்தின் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு “லால் கிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் அமீர்கானின் நண்பனாக நடிப்பதற்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். ஆகையால் தற்போது அமீர்கானின் நண்பர் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அவர் யார் என்றால், பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவரும், அமீர்கானும் ராணுவ வீரர்களாக நடிக்கப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.