தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கராத்தே கல்யாணி. இவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் பான் இந்தியா அளவிலான ஒரு பாப் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஸ்லோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நானும் என்னுடைய இந்து சமூகமும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்பது இந்து கடவுளான ராமரை பூஜிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்லோகமாகும். இப்படிப்பட்ட புனித ஸ்லோகத்தை ஆபாசமான பாடலுக்கு பயன்படுத்தி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. எனவே அவர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.