Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” இதை தான் செய்யணும்…. பெண்ணுக்கு 23 இடத்தில் கத்திக்குத்து….!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்தவர் அபூர்வா  பூரணி. இவர் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனர் முகமது ஆசாஸ்  என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த  நிலையில் மதத்தை பொருட்படுத்தாமல் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அபூர்வா பூரணி என்னும் தனது பெயரை அரஃபா பானு என்று மாற்றிக் கொண்டார்.

அதோடு  பிராமணப் பெண்ணான அபூர்வா பூரணியை   அசைவ உணவுகளை சமைக்கவும், பர்தா அனியவும், இஸ்லாமிய முறைகளை கடைபிடிக்கவும் அசாஸ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்  . ஆனால் தொடர்ந்து அபூர்வா அதனை மறுத்து வந்துள்ளார் . இதனிடையே  அசாஸ் க்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் விஷயமும் தெரியவந்தது . இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த அபூர்வா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் அபூர்வா வை  தேடிவந்த அசாஸ் தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்டுள்ளார் அதற்கு அபூர்வா  மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அசாஸ்  தாக்கியுள்ளார். இருபத்தி மூன்று இடங்களில் கத்திக்குத்தி படுகாயம் அடைந்த அபூர்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து  தகவலறிந்த  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அசாஸை கைது செய்தனர்.

 

Categories

Tech |