விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விஜர்சன விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செய்தியாளரிடம் பேசும் போது விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய திருவிழாவாகும். இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பான முறையில் கொண்டாடிட மாவட்ட ஆட்சியர் தகுந்த அனுமதி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.