வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில், நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. வங்காள தேசத்தில் இது போன்று பல முறை இந்து கோவில்களில் இருக்கும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.