Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் சேதம்…. அடித்து நொறுக்கப்பட்ட தெய்வச்சிலைகள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் உள்ள இந்து மத கோயில்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரி மாதா கோவிலில் இருக்கும் தெய்வ சிலைகளை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக வழிபாட்டு தளங்களில் நடக்கும் நாச வேலை இது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் தெரிவித்ததாவது, எட்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கோயிலை தாக்கத் தொடங்கினர். அவர்கள் தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை. காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக இந்து மத கோயில்கள் அதிகமாக சேதப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |