Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் ஒற்றுமை… 1லட்சம் இடத்தில் சிலை… சிறப்பு சட்டம் போட சொன்ன அர்ஜூன்சம்பத் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை ”இந்து ஒற்றுமை” விழாவாக… ”மண் காப்போம்” இயக்கமாக இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடத்திலே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.

விநாயகர் சிலைகள் மண்ணிலே தயாரிக்கபடும். களிமண்ணுல ‌தயாரிக்கணும். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில அந்த விழா நடைபெறும். மண் காப்போம் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் நடத்துனாரு. இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநில அரசாங்கங்கள் அவருடன் இணைந்து மண்வளத்தை பாதுகாக்க கூடிய அளவிலே சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான முன் வரைவுகள் தயார் செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

உலகத்திலே பல வெளிநாடுகளும் ஐநா சபையிலே இருக்கக்கூடிய பல நாடுகளும் கூட இந்த மண் வளத்த பாதுகாக்க வேண்டும். மண் மலடாய் ஆகிக் கொண்டு இருக்கிறது. இந்த மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.

பல விஷயங்களுக்காக சட்டமன்றத்த கூட்டி சிறப்பு தீர்மானம், சிறப்பு சட்டம் எல்லா போடுறீங்க. இந்த தமிழகத்திலே மண்வளம் குன்றாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான சிறப்பு சட்டங்களை இயற்றக் கூடிய வகையிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, மண்வளம் பாதுகாக்கின்ற சட்டங்களை இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் இந்த நேரத்திலே முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |