Categories
மாநில செய்திகள்

பல்வேறு தாக்குதலுக்குள்ளானது இந்து மதம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி …!!

மதுரையிலே எஸ்.எஸ் காலனியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளரும், வழக்கறிஞரும் சீதாராமன் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்  ஏகேபி,  சமூக ஆர்வலர்  நெல்லை பாலு ஆகியோர் சுவாமிஜி நினை போற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார்,

சுவாமிஜி அவர்கள் முக்தி அடைந்து 13 நாட்கள் ஆன நிலையிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சார்பிலே அவருக்கு பிரார்த்தனையை செய்து இருக்கின்றோம். அவர் பல்வேறு சமுதாயத் தொண்டு ஆன்மீகத்திலே‌ அவர் ஆற்றி இருந்தாலும் கூட,  குறிப்பாக இந்த இந்து சமயத்தை காப்பாற்றுவதற்காக, ஏனென்றால் மன்னர் காலத்தில் இருந்து முகலாயர் காலத்தில் இருந்து பல்வேறு தாக்குதலுக்கு ஆளானது இந்துமதம்.

அந்த இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு பல்வேறு காலகட்டங்களிலே பல்வேறு கள போராளிகள் தோன்றி அவதரித்து,  இதை காப்பாற்றி உள்ளனர். இன்றைக்கு கூட நீங்க பார்த்தீர்களானால் ஆடி மாதம். தெருவுக்கு தெரு மாரியம்மன், காளியம்மன் எல்லா இடங்களிலும் கூழ் ஊத்துற காட்சி ஆடி வெள்ளிக்கு அம்மன் கோயில கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆதாயத்தை வைத்து மதமாற்றம் செய்வதை தடை செய்யப்பட வேண்டும் என்பதையும், எதுவும் உணர்வுபூர்வமாக மதத்தை எல்லோரும் அவர்களுடைய சுதந்திர உரிமையோடு பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதிலே சுவாமிஜி அவர்களும் அந்த பணியிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அத்தனை தாக்குதல்களுக்கு பிறகும் இந்து மதம் நிலைத்து,  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், இன்றைக்கும் நாம் பல்வேறு ஆராய்ச்சிகளிலே…

அகழ்வாராய்ச்சிகளிலே நாம் பார்க்கிற போது கல்தோன்றி முன் தோன்றா தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று சொல்லி,  அந்த தமிழ் குடிக்கு ஆதாரமாக இருப்பது இந்த இந்து மதம் என்ற அடிப்படையிலே,  இன்றைக்கு இந்து மதத்தை காப்பாற்றுகின்ற அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற சுவாமிஜி அவர்கள் முக்தி அடைந்திருக்கிறார்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடைவதற்காக நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையிலே நாங்களும் பங்கேற்றுள்ளோம் என தெரிவித்தார்.

Categories

Tech |