அமெரிக்க நாட்டில் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தசரா, நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அக்டோபர் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைகளை உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
எனவே, அக்டோபர் மாதத்தை தான் இந்துக்களின் பாரம்பரியமான மாதம் என்று கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும் என்று அமெரிக்க நாட்டின் இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளது.
யோகாசனத்தில் தொடங்கி உணவு, நாட்டியத்தில் தொடங்கி இசை, கொண்டாட்டத்தில் தொடங்கி கொடை, அகிம்சையில் தொடங்கி தத்துவார்த்தம் என்று அமெரிக்க நாட்டில் இந்து மதத்தின் பங்களிப்பு என்பது சிறப்பானதாக இருக்கிறது. இதனால், இந்துக்களின் பாரம்பரியமான மாதமாக அக்டோபர் மாதத்தை கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பிற்கு எம்.பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரவேற்பு அளித்துள்ளார்கள்.