Categories
உலக செய்திகள் வானிலை

கிழக்கு சீனாவில் சக்திவாய்ந்த புயல்…. 4 நாடுகளில் கனமழைக்கு வாய்ப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

கிழக்கு சீன கடலில் சின்னமனூர் என்னும் புயல் உருவாகியுள்ளது.

கிழக்குச் சீன கடலில் ஹின்னம்னோர் என்னும் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் சீனாவில் இன்று காலை 10 மணிக்கு அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புயலானது வடக்கு நோக்கி கிழக்கு சீன கடலில் நகர வாய்ப்புள்ளதால் அதன் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட கிழக்கில் இருக்கும் ஜெயியாங், ஷங்காய் மற்றும் தைவானில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குச் சீனாவில் உள்ள நகரங்கள் படகு சேவையை நிறுத்தி வைத்துள்ளதோடு கப்பல்கள் அனைத்தும் துறைமுகத்திற்கு திரும்பும் படி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிழக்கு சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வென்ஜோவ், ஷங்காய் நகரில் மீட்பு பணிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஷங்காய் வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த சூறாவளியால் அதிகபட்சமாக 175 கிலோமீட்டர் மயில் வேகத்தில் காற்று வீசு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜப்பானின் ஒகினாவா நகரத்திற்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலால் தைவான் நாட்டின் நியோலி மாவட்டத்தில் கனமழை மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நூறு சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தொடர்பு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “தைவான் முழுவதும் சுமார் 40 விமானங்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட படகு சேவைகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |