பேஸ்புக்கில் லைவ் வீடியோபோட்டு மறுநாள் ஹிந்தி நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுபமா பதக் என்பவர் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி மும்பை சென்றுள்ளார். பின்பு போஜ்புரி என்னும் படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆகவே மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் தினம் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியில் பேசிய அவர், “ஏதேனும் உங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன அல்லது தற்கொலை செய்யப் போவது போன்று உணர்வுகள் எழுந்து யாரிடமேனும் கூறினால் ஆணோ, பெண்ணோ எவ்வளவு நெருங்கிய நண்பராக இருப்பினும். தங்களிடம் இருந்து விலகி இருங்கள் என கூறி விடுவார்கள்.
எனவே யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். உங்களின் பிரச்சனைகளை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது என்னுடைய வாழ்வில் கற்ற பாடம். மக்கள் சுயநலம் உடையவர்கள். பிறரைப் பற்றி கவலைப் படாதவர்கள்” என கூறியுள்ளார். மலாடில் உள்ள விஸ்டம் தயாரிப்பு நிறுவனத்தில் பத்தாயிரம் முதலீடு செய்து உரிய காலம் கடந்தும் பணம் திரும்பி கொடுக்கவில்லை என அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பில் இருந்தது. அதை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதுபோல சமீபத்தில் ஹிந்தி தொலைக்காட்சி நடிகை சமீர் சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.