இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
இந்த காலகட்டத்தில் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி என்பது அடிக்கடி வருகின்றது. அனைவரும் அமர்ந்து கொண்டேன் நீண்டநேரம் பணிபுரிவதால் முதுகெலும்புக்கு துணைபுரியும் தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுகின்றது. நீங்கள் ஒரு இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யாமல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் அத்தகைய சூழ்நிலை உருவாவது இல்லை. சில அலுவலகங்களில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர்வதற்கு கூட நேரமில்லாமல் வேலை செய்து வருகின்றனர்.
சில நேரங்களில் இடைவெளிகள் எடுத்துக் கொள்வது மிக அவசியம். இது தவிர உங்கள் பணி இடம் வசதியாக இருக்கவேண்டும் என்பதையும் நீங்கள் நினைவு கொள்ளுங்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முதுகு வலியை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
என்னென்ன பொருள்:
முதுகு வலியை போக்க இஞ்சி மிகவும் பயனுள்ளது. 4 முதல் 5 துண்டுகள் இஞ்சியை எடுத்து ஒன்றரை கப் தண்ணீரில் போட்டு 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து அதனை குளிர வைத்து பிறகு சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் முதுகு வலி பறந்து போய் விடும். நீங்கள் விரும்பினால் ஒரு இஞ்சி பேஸ்ட் செய்து வலி மிகுந்த பகுதியில் தடவலாம். இதுவும் நிவாரணமளிக்கும்.
துளசி உங்கள் முதுகு வலி மற்றும் இடுப்பு வலியிலிருந்து விடுபட உதவும். ஒரு கப் தண்ணீரில் இரண்டு முதல் பத்து துளசி இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனை குளிர வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இதனை குடித்து வந்தால் முதுகு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு முழு உடலுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு பொருள். இது முதுகு வலி மற்றும் இடுப்பு வலியும் போக்கக்கூடியது. நீங்கள் கடுகு எண்ணெயில் மூன்று முதல் நான்கு பல் பூண்டு சேர்த்து கருப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். சிறிது சிறிதாக இந்த எண்ணையை விட்டு வலி மிகுந்த இடத்தில் மசாஜ் செய்து கொள்ளவும். இது உடனடி நிவாரணம் தரும்.