ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளரும் நடிகரும் ஆவார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் ”அன்பறிவு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் நேரடியாக OTT யில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.