தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உட்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால் அந்த முடிவை அவர் திடீரென ஒத்திவைத்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.