Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.

Image

 

இந்நிலையில் மன்மோகன் சிங் போட்டியின்றி ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் டும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Image result for Ashok Gehlot

ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஜியை வாழ்த்துகிறேன். டாக்டர் சிங்கின் தேர்தல் முழு மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அவரது பரந்த அறிவும், பணக்கார அனுபவமும் ராஜஸ்தான் மக்களுக்கு நிறைய பயனளிக்கும்.

Categories

Tech |