Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் வரலாறு…..!!

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த செய்தி திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

க.அன்பழகன் வரலாறு : 

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1992 டிசம்பர் 19ம் தேதி பிறந்தார் அன்பழகன். இவரின் இயற்பெயர் ராமையா. சுயமரியாதைக் கொள்கையில் கொண்ட ஈடுபாட்டால் ராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.

தமிழில காவலர் கலைஞர் , தமிழ் கடவுள் உட்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

1944- 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியின் துணைப் பேராசிரியராக பணியாற்றினார்.

1957ல் திமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் எழும்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962 செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வென்று மேலவை உறுப்பினராகினார்.

1967 திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்பழகன்.

1971 இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

1984 இல் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி தனது எம்எல்ஏ பதவியை துறந்தவர் அன்பழகன்.

மொத்தம் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிய  பெருமைக்குரியவர் பொதுச்செயலாளர் அன்பழகன்.

Categories

Tech |