அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வு விழா என்று சொன்னதும் இளைஞர்கள் முதல் பெரிய ஞானிகள் வரை தனது முகநூல் பக்கம் அல்லது இன்னும் சமூக வலைதளங்களில் தன் வாழ்த்துக்களை போட்டு மூவர்ணக் கொடியை போட்டு ஹேப்பி ரிபப்ளிக் டே என்று சொல்லிவிட்டால் அன்றுடன் அந்த விழா முடிந்து விட்டது , தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல. மிகவும் சிறப்பான மிகுந்த பெருமைமிகுந்த நாள் தான் இந்த குடியரசு தின நாள்.
இந்த வருடம் நமது சுதந்திர இந்தியாவில் 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. பல தேசத் தலைவர்களும் மற்றும் புரட்சியாளர்களும் நாடு முழுவதும் பல போராட்டங்களை நிகழ்த்தி தனது குருதி சிந்தி , தன் தேகம் தந்து , தாய்த்திரு நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து 200 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்த ஆங்கிலேய அடிமை ஆட்சியையும் முறியடித்து , மக்கள் எல்லோரும் ஆனந்தமாகவும் , சுதந்திரமாகவும் காற்றை சுவாசிக்க நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தனர்.
மக்களால் மக்களுக்காக என்பதே குடியரசின் கோட்பாடு. குடியரசு என்றால் மக்களால் மக்களுக்காக அது என்ன?.. மக்களால் மக்களுக்காக புரியவில்லையே அப்படி என்று நீங்கள் கேட்கலாம்.அதாவது 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்க கூடிய நாள் , நம் நாட்டின் சுதந்திர தினம் எப்படி சுதந்திரம் பெற்றது என்றெல்லாம் அறிந்ததே. அதேபோல் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அதாவது குடியரசு தினம் என்றால் என்ன ? ஒரு நாட்டின் விடுதலைக்குப் பிறகு அந்நாட்டின் மக்களுக்கு என தனிப்பட்ட சட்ட திட்டங்கள், ஒரு அரசியல் அமைப்பும் இல்லாமல் நம் நாடு இருந்தது. அந்த சமயத்தில் 1930-ல் பிரிட்டிஸ் ஒருவரால் எழுதப்பட்ட சட்டத்தையும் பின்பற்றினோம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் என்ன சட்டம் இயற்றியதோ அதன் வழியே நாம் சென்றுள்ளோம். ஆனாலும் ஏன் நமக்கென ஒரு சட்டம் ஏற்றாமல் இருக்கிறோம் என நம் தலைவர்கள் நேரு, வல்லபாய் பட்டேல், ராஜாஜி மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட குழு ஒன்று அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி நாம் இன்னும் நமக்கென்ன சட்டம் இயற்றாமல் இருக்கிறோம் என ஆராய்ந்தது. அந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்கள் தலைமையில் இந்த அரசியல் நிர்ணய சபை ஒரு நல்ல யோசனையை கொண்டுவந்தது . டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மூலம் ஒரு குழுவை உருவாக்கி, நமக்கென ஒரு அரசியல் சாசனம் உருவாக்க வேண்டும் என்று சொல்லி , டாக்டர் அம்பேத்கர் அவர்களின் குழு அந்த பணியை தொடங்கிய தினம் 1947 ஆம் ஆண்டு நவம்பர்4 அன்று ஆரம்பித்து 2 வருடம் 11 மாதம் 18 நாளில் அப்பணியை முடிந்தது.
1950 ஜனவரி 24 அன்று அந்த அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் ஒப்படைத்தது. அன்றுதான் அரசியல் நிர்ணய சபையின் தலைமையில் ஒரு குடியரசுத் தலைவருக்கான போட்டி நடந்தது. அதிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தே முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். அவரின் ஒப்புதலுக்கு இணங்க ஜனவரி 26 ஆம் நாள் அன்று நம் இந்தியர்களுக்கென , இந்தியர்களால் அரசியல் சாசனம் உருவானது. அன்றைய தினமே நம் நாட்டின் குடியரசு தினம் என்று அனைவராலும் போற்றப்பட்டது .
இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே , மக்களால், மக்களுக்காகவே எழுதப்பட்ட அரசியல் சாசனம் உருவான நாள் ஜனவரி 26 ஆம் நாள் 1950 ஆம் வருடம் . இந்த அரசியல் சாசனம் என்பது 22 பிரிவுகளையும், 12 உட்அட்டவணைகளையும் உள்ளடக்கியது. இந்த அரசியல் சாசனம் உலகின் மிகப்பெரிய அரசியல் சாசனம் வேர்ல்டு பிக்கஸ்ட் ஹன்ஸ்டி டியூஷன் ஆஃப் இந்தியா.
1947-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கினாலும் தனி உரிமைகள் , கடைமைகள் அனைத்தையும் உருவாக்கப்பட்டு இனி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று அறிவித்த நாள் நம் குடியரசு தின விழாவாக கொண்டாடுகின்றோம்.