Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.ஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன்  சந்தை பகுதியைச் சேர்ந்த மாணவி கிளாடிஸ் பிளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

Image result for bribe

இதனையடுத்து மாணவி பணத்தை மார்த்தாண்டத்தில் வைத்து தருவதாக கூறிவிட்டு, இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் மாணவியிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை  மார்த்தாண்டத்தில் வைத்து வாங்கும் போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு போலீசார்  ரத்தன்ராஜை  கைது செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |