இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 04
நெட்டாண்டு : 217_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 149 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள் :
598 – சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை ((கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார்.
1578 – மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார்.
1701 – மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.
1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன.
1789 – பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் தலைமையில் இத்தாலியின் பிரெஞ்சு இராணுவத்தினர் லொனாட்டோ சமரில் வெற்றியடைந்தனர்.
1824 – துருக்கிக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கோசு என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1889 – வாசிங்டனில் ஸ்போக்கேன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயில் 32 குடியிருப்பு மனைகள் அழிந்தன.
1914 – செருமனி பெல்ஜியத்தை முற்றுகையிட்டதை அடுத்து, பெல்ஜியமும் பிரித்தானியப் பேரரசும் செருமனிக்கு எதிராகப் போரை அறிவித்தன. அமெரிக்கா நடுநிலை வகித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் 12வது இராணுவம் போலந்தின் தலைநகர் வார்சாவாவைக் கைப்பற்றியது.
1924 – மெக்சிக்கோவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்தின.
1936 – கிரேக்கப் பிரதமர் இயோனிசு மெட்டாக்சசு நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவராக அறிவித்தார்.
1944 – பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர்.
1946 – வடக்கு டொமினிக்கக் குடியரசில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் உயிரிழந்தனர், 20,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1964 – குடிசார் உரிமைகள் இயக்கம்: சூன் 21 இல் காணாமல் போன குடிசார் உரிமைகளுக்கான ஊழியர் மூவரின் உடல்கள் மிசிசிப்பியில் கண்டெடுக்கப்பட்டன.
1965 – நியூசிலாந்தினுள் குக் தீவுகள் சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தைப் பெற்றது.
1969 – வியட்நாம் போர்: பாரிசில் அமெரிக்கப் பிரதிநிதி என்றி கிசிஞ்சருக்கும் வடக்கு வியட்நாம் பிரதிநிதி உவான் தூயிக்கும் இடையில் இரகசிய அமைதிப் பேச்சுகள் ஆரம்பமாயின. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
1972 – உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.
1972 – சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது..
1974 – இத்தாலியில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில், 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர்.
1975 – மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சப்பானிய செம்படையினர் அமெரிக்கத் தூதர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியாபயணமாயினர்.
1977 – அ. அமிர்தலிங்கம் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984 – மேல் வோல்ட்டா நாடு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1987 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
2006 – திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை: வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகத்து 23 இல் பதவியேற்றார்.
2006 – ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007 – நாசாவின் பீனிக்சு விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2015 – இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இரண்டு விரைவு தொடருந்துகள் வெள்ளம் காரணமாக தடம் புரண்டதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள் :
1281 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311)
1521 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590)
1792 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1822)
1900 – எலிசபெத் மகாராணி, மகாராணியின் தாய் (இ. 2002)
1901 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (இ. 1971)
1929 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 2012)
1929 – கிஷோர் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 1987)
1935 – நா. தர்மராஜன், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
1950 – ந. ரங்கசாமி, புதுச்சேரியின் 9வது முதலமைச்சர்
1960 – சோழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)
1961 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1961 – பாக்கியசிறீ தீப்சே, இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை
1965 – விசால் பரத்வாஜ், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
1981 – மேகன் மெர்க்கில், அமெரிக்க நடிகை, மனிதநேயர், பிரித்தானிய அரசு குடும்பத்தவர்
இன்றைய தின இறப்புகள் :
1859 – ஜான் வியான்னி, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1786)
1866 – ஐந்தாம் சிவாஜி, மராத்திய கோல்காப்பூர் அரசர் (பி. 1830]])
1875 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1805)
2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்
2006 – நந்தினி சத்பதி, இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1931]])
2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)
2009 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானியப் புள்ளியியலாளர் (பி. 1927)
இன்றைய தின சிறப்பு நாள் :
புரட்சி நாள் (புர்கினா பாசோ)