Categories
தேசிய செய்திகள்

“கடவுள் ராமருக்கு” குளிருதா… போர்வை, ஹீட்டர் வழங்கி… உ.பியில் வேடிக்கை நிகழ்வு..!!

அயோத்தியில் ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு குளிரும் என்று ஹீட்டரும், போர்வையும் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோயில் கட்டப்படும் வரை தற்காலிகமாக ராமர் சிலையை ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் இவ்வாறான நிகழ்வு நடைபெறும். தற்போது அதிக அளவில் குளிர் நிலவி வருவதால் அயோத்தியில் தற்காலிகமான ராமர் கோயிலில் ராமருக்கு குளிர கூடாது என்பதற்காக போர்வையும் ஹீட்டர் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை அர்ச்சகரான அச்சரியா சத்தியேந்திர தாஸ் கூறும் போது: “தற்போது ஊட்டியில் அதிகமான குளிர் நிலவுவதால் தற்காலிக ராமர் கோவிலில் உள்ள கடவுள் ராமருக்கு குளிர கூடாது என்பதற்கான சூடான காற்று வீசும் ஹீட்டரை பொருத்தியுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ராமரைப் போர்வை கொண்டும் போத்தியுள்ளோம். இதனால் வெளியில் நிலவும் குளிரிலிருந்து ராமரால் தப்பிக்க முடியும்.இதற்கு முன்பாக அவர் அருகே நெருப்பு மூடி வைக்கலாம் என்று யோசனை செய்தோம்.

ஆனால் தற்போது உள்ள கோவில் கோவில் மரம் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்டது என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இந்த திட்டத்தை மாற்றி தற்போது ஹீட்டர் வைத்துள்ளோம். குளிர்காலம் முடியும் வரை இது தொடர்ந்து கடைபிடிப்போம். வெயில் காலத்தில் போது அதிக சூடு இருக்கும் தற்காலிக கோவிலில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதால் அப்போது அதை பயன்படுத்திக் கொள்வோம்” என கூறினார். அயோத்தி ராமர் கோயில் கடவுளுக்கு குளிரும் என்று போர்வையும், ஹீட்டரும் வழங்கப்பட்ட சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |