உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ?
பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் சேர்த்து, நோட்டீஸ் அடித்து.. வீடு வீடாக கட்டாயம் கொடுக்க வேண்டும், கொடுத்து அதேபோல எல்லோரையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க வேண்டும் என தெரிவித்தார். ஒவ்வொரு பேரூராட்சிலும் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்று சொல்கிறேன். அதேபோல கண்டிப்பாக துண்டு பிரசுரம் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் சேர வேண்டும்.
ஆகவே இதற்கு பொறுப்பாளர் போட்டுவிடுவோம். இருந்து முழுமையாக 15 நாட்கள் பணியாற்றி, ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக நடத்த வேண்டும். ஏனென்றால் மக்கள் விரும்புகிறார்கள்… ஒவ்வொரு வீட்டிலும் பாதிக்கிறார்கள், எனவே இந்த போராட்ட்டதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பிறகு ஊராட்சிகளில் போராட்டம். மொத்தமாக 12 யூனியன் வரும், அதில் ஒரு யூனியன் வேற தொகுதிக்கு போய்விடும். அப்போ 11 யூனியன் வரும். அந்த யூனியனில் முழுமையாக எல்லாம் சேர்ந்து… ஒன்றிய செயலாளர், ஊராட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அங்க இருக்க கூடிய அனைவரும் சேர்ந்து அங்கு போராட்டம் நடத்த வேண்டும். இதுல கலந்து கொள்ள எல்லா நிர்வாகிகளுக்கும் பெரிய வாய்ப்பு இருக்கும். டிவிஷனில் எடுத்துக் கொண்டால்… 100 இடங்களில் போராட்டம் நடக்கப் போகிறது.
அந்த டிவிஷனில் இருக்கின்ற எல்லா மாவட்ட நிர்வாகிகள்…. எல்லா சார்பு அணி நிர்வாகிகள் இருக்கிறார்கள்… எல்லோருக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து, அந்த ஆர்ப்பாட்டத்தை அங்கேயும்… அங்கு உள்ள உள்ளூர் பிரச்சனை ( ஊராட்சி அளவில் பிரச்சனைகளை எடுத்து, எல்லா பக்கமும் வீடு வீடாக துண்டு பிரசாரம் நோட்டீஸ் அடித்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.