Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் திரைப்படமான “புஷ்பா 2″…. சூட்டிங் தாமதம்…. காரணம் என்ன தெரியுமா….?

பான் இந்தியா அளவில் ஹிட்டான புஷ்பா 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இந்த திரைப்படம் பான் இந்தியளவில் ஹிட்டானது. இந்தத் திரைப்படமானது ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த    “புஷ்பா 2”  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பானது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் போட்டோ சூட் எல்லாம் நடந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தாமதமாக காரணம் சரியான லொகேஷன் கிடைக்காததால் தான் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படமானது 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |