போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர். 50 நாட்களாக பெண்கள் வந்து உட்கார்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் எங்கும் அவர் வரவில்லையே. முதலமைச்சர் மக்களை வந்து சந்திக்க வேண்டும் அவர்களுடன் உட்கார வேண்டும். அறையில் அமர்ந்து ஆட்சி செய்ய முதலமைச்சர் தேவையில்லை. மக்களோடு நின்று மக்களின் பிரச்சனையை பேசுவதற்கே முதல் அமைச்சரும் பிரதமரும் தேவை. மோடியின் ஆட்சியை பார்த்து ஹிட்லர் ஆட்சியை அறியலாம்” என்றும் அவர் கூறினார்.