ஹிட்லருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் இருக்கும் கைக்கடிகாரம் சுமார் 144 கோடிக்கு ஏலத்தில் போகலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஒரு கடிகாரம், சர்வாதிகாரியான ஹிட்லரின் கைக்கடிகாரம் என்று வதந்தி பரவியது. தற்போது, அது ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. அது இரண்டிலிருந்து நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் 44 ஆம் பிறந்தநாள் அன்று அந்த கைக்கடிகாரத்தை வாங்கியிருக்கிறார்.
அதில் மூன்று தேதிகள் இருக்கின்றன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள்.
கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்திருந்ள்ளார் என்றும் அது சட்டபூர்வமானது என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் Jaeger-LeCoultre என்ற கைக்கடிகார நிறுவனமானது அந்த கடிகாரம் ஹிட்லருடையது தான் என்று அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.