Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூள் கிளப்பிய ஹிட்மேன்….. 60 ரன் அடித்து அசத்தல் …!!

நியூசிலாந்துக்குகெதிரான 5ஆவது போட்டியில் அரைசதமடித்து  ரோஹித் சர்மா அசத்தினார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார்.

Image

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். 5 பந்துகளே ஆடிய சஞ்சு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கேப்டன் ரோஹித் களமிறங்கி ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.

Image

 

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 45 ரன்னில் ஆட்டமிழக்க ஷ்ரேயஸ் ஐயர்-  ரோஹித் கூட்டணி ரன் வேட்டையை தொடங்கியது. 50 ரன் அடித்து அசத்திய நிலையில் ஹிட் மேன் 41 பந்துகளில் 60 ரன் எடுத்து (Retired Hurt) வெளியேறினார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 18 ஓவர்களில் 143 ரன் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.

ஷ்ரேயஸ் ஐயர் -29 (27)*

சிவம் துபே – 1 (2)*

Categories

Tech |