யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் கோலமாவு கோகிலா, கூர்கா, கோமாளி உள்ளிட்ட பல படங்களை நடித்த யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். தற்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் தான் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். யோகி பாபு அந்த வீடியோவில் பேட்டிங் செய்கிறார்.அப்போது அவர் அடிக்கும் பந்துகள் அனைத்தும் சிக்சர், பவுண்டரிகளாக செல்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யோகி பாபுவின் திறமையை பாராட்டி லைக்ஸை குவித்து வருகின்றனர்.
— Yogi Babu (@iYogiBabu) March 8, 2021