Categories
உலக செய்திகள்

எல்லாம் .விதி…. HIV-யிலிருந்து பூரண குணமடைந்து….. புற்றுநோயில் சிக்கி தவிக்கும் துரதிஷ்ட மனிதன்…..!!

எச்ஐவி நோயிலிருந்து பூரண குணமாகிய உலகின் முதல் நபருக்கு தற்போது புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் HIV-யால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார். எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் திமோதி ஆவார். அதற்கு முன் வரை எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வந்தார்கள். ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் அவர்களது மரணத்தை தள்ளிப் போட முடிந்ததே தவிர, முற்றிலுமாக அந்த நோயிலிருந்து அவர்களை குணமாக்கி வெளியே கொண்டுவர முடியவில்லை.

ஆனால் திமோதி முழுமையாக பூரண குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அந்த நோயிலிருந்து குணமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்து உள்ளது.

HIV இருந்த போதே, அவருக்கு புற்றுநோயும் இருந்துள்ளதாகவும், HIV தொடர் சிகிச்சையில் இதை அவர் சரிவர கவனிக்காததே நோய் முற்றியதற்கு காரணம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. HIVயில் இருந்து தப்பித்து மோசமான புற்று நோயில் சிக்கி மீண்டும் மரணத்தின் பிடியில் அவர் விழுமாறு கால சக்கரம் சுழன்றது அவரது துரதிஷ்டவசமாகவே பார்க்கப்படுகிறது.

Categories

Tech |