Categories
தேசிய செய்திகள்

“திருமணத்துக்கு முன் கட்டாய HIV டெஸ்ட்” கோவா_வில் புதிய திட்டம் …!!

திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக HIV டெஸ்ட் மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய திட்டத்தை கோவா மாநிலம் நிறைவேற்றவுள்ளது.

மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் மிக கொடூரமான நோய்யாக பார்க்கப்படுவதில் ஓன்று தான்  எச்.ஐ.வி என்ற வைரஸால் பரவும் எய்ட்ஸ். உயிரையே கொள்ள கூடிய இந்த நோயி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்சமயம் தடுப்பூசியோ , நிரந்தர தீர்வோ இல்லை . மக்களால் மிகவும் கூடியதாக பார்க்கப்படும் இந்த பரவலாம் இருக்க  எச்.ஐ.வி பரிசோதனை முக்கியமானதாகும். அந்த வகையில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்க கோவா மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Image result for hiv test

இது குறித்து கோவா மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே கூறுகையில், கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதை மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.இதற்க்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |