பிக் பாஷ் லீக் தொடரின் 50ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஹோபர்ட் அணி கேப்டன் மேத்யூ வேட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹோபர்ட் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் ஷார்ட், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வேட் – ரைட் இணைந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். வேட் 56 ரன்களும், ரைட் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பெய்லி அதிரடியாக 29 ரன்களை சேர்த்தார். இறுதியாக ஹோபர்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. சிட்னி அணி சார்பாக டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணியில் கவாஜா 3 ரன்களுக்கு வெளியேற, தொடர்ந்து வந்த ஃபெர்குசன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் – அலெக்ஸ் ராஸ் ஆகியோர் சேர்ந்து சிட்னி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 42 பந்துகளில் 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ராஸ் 36 ரன்களுக்கு வெளியேறினார். அதையடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக சிட்னி தண்டர்ஸ் அணி 17.3 ஓவர்களுக்கு 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹோபர்ட் அணியில் ஷார்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதனால் ஆட்டநாயகனாக ஷார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Bowling all-rounder! 😏
A career-best 4-15 from D'Arcy Short! #BBL09 pic.twitter.com/1bKfcmE2wG
— KFC Big Bash League (@BBL) January 24, 2020